07

அம்பாவின் சாபம் - முதல் பாகம் 6,7&9

6
அஸ்தினாபுரத்துக்கு காசி மன்னன் அவனோட பொண்ணுங்க அம்பா, அம்பிகா, அம்பாலிகா சுயம்வரத்துக்கு ஓலை அனுப்பாததால காண்டான ராஜமாதா சத்யவதி, பீஷ்மன்ட்ட காசிக்குப் போயி மூணு பொண்ணுகளையும் தூக்கிட்டு வரச்சொல்றா. ரதத்துல தனி ஆளா வில் அம்போட காசிக்குப் போன பீஷ்மன், நேரா அரண்மனைக்குப் போறான். அங்க அம்பா, அம்பிகா, அம்பாலிகான்னு மூணு இளவரசிகளுக்கும் சுயம்வரம் நடந்திட்டிருக்கு,
மாஸ் என்ட்ரி குடுத்த பீஷ்மன் "காசி மன்னா. சுயம்வரத்துக்கு எங்களுக்கு மட்டும் ஓலை அனுப்பாம அவமானப்படுத்திட்ட. அதனால மூணு இளவரசிகளையும் தூக்கிட்டு வரச்சொல்லி ராஜமாதா சத்யவதி உத்தரவு போட்டுட்டாங்க. இதோ தூக்கிட்டுப் போறேன். முடிஞ்சா தடுத்துக்கோ"ன்னு சொல்லிட்டு மூணுபேரையும் இழுத்துட்டுப் போறான் பீஷ்மன்.
இந்த பீஷ்மன் அவன் நெனச்ச நேரத்துல சாகுற வரம் வாங்குனதால, சண்டை போட்டு ஜெயிக்கமுடியாது. அதனால மாவீர மன்னர்கள் எல்லாரும் வேடிக்கை மட்டும் பாக்குறாங்க. வேறென்ன பண்ணமுடியும்? தன்னை விட வலுத்தவன் கிட்ட பாச்சா பலிக்காது.
மூணு பொண்ணுங்களையும் தூக்கிட்டு ரதம் வர்ற வழியில அம்பாவோட லவ்வர் சால்வன் பீஷ்மன் கிட்ட சண்டைக்கு வர்றான்.  அவனையும் தோற்கடிச்சிட்டு நேரா அஸ்தினாபுரம் வந்த பீஷ்மன், மூணு பேரையும் சத்யவதி கிட்ட ஒப்படைக்கிறான். அம்பா தன்னோட லவ்வர் சால்வன் பத்தி சத்யவதி கிட்ட சொன்னவுடனே, சத்யவதி அம்பா விரும்புனவன போய் கட்டிக்கோன்னு சொல்லி அனுப்பிவிடுறா. (காதலுக்கு மரியாதை)
அம்பா அவ லவ்வர் சால்வனைத் தேடிப்போய் "நம்ம லவ் பத்தி சொன்னவுடனே என்னை அனுப்பி வச்சிட்டாங்க. வா கல்யாணம் பண்ணலாம்"னு கூப்பிட்டதுக்கு "நா பீஷ்மனோட சண்டை போட்டு தோத்துட்டேன். இனி உன்னை கல்யாணம் பண்ணமாட்டேன். கெளம்பு கெளம்பு"ன்னு கெளப்பிவிட்டான் அவ லவ்வர் சால்வன். (என்னடா லாஜிக் இது? சால்வனை ஒருபக்கம் லவ் பண்ணிட்டு இன்னொரு பக்கம் சுயம்வரமும் பண்ணுவ. சுயம்வரம் பெயிலியர் ஆனவுடனே திரும்பிவந்து லவ்வர் கால்ல விழுவியா?)
அம்பாவுக்கு கிரிட்டிகல் பொசிசன். என்ன பண்றதுன்னு தெரியல. ஒட்டுமொத்த கோபமும் பீஷ்மன் மேல திரும்புது. அந்த பீஷ்மன் கிட்டயே நியாயத்தைக் கேப்போம்னு அஸ்தினாபுரம் அரண்மனைக்குத் திரும்புறா.
அங்க வந்து பாத்தா, அந்த நோஞ்சாம்பய விசித்ரவீரியனுக்கு அம்பிகா, அம்பாலிகா ரெண்டு பேரையும் கல்யாணம் பண்ணி வைக்கிறாங்க ராஜமாதா சத்யவதியும், பீஷ்மனும்.
இதுதான் சமயம்னு அம்பா நேரா சத்யவதி கிட்ட போயி, நடந்த லவ் பெயிலிர சொல்லி,  தன்னையும் விசித்ரவீரியனுக்கு கல்யாணம் பண்ணி வைங்கன்னு சொல்றா.
"இந்தாம்மா, நீயாச்சு உன் லவ்வராச்சு. நா என்ன பண்ணமுடியும்? உன் காதலுக்கு மரியாதை குடுத்து உன்னை அனுப்பி வச்சேன். ஆனா உன் லவ்வர் உன்னை ரிஜெக்ட் பண்ணா அதுக்கு நான் என்ன பண்ணமுடியும்? வேணும்னா ஒன்னு பண்ணு. அந்தப்புரத்துல நிறைய தாசிகள் இருக்காங்க. நீயும் அவங்களோட போய் சேந்துக்கோ"ன்னு சத்யவதி சொல்றா.
அம்பாவுக்கு இதைக்கேட்டு செம ஷாக். வந்துச்சு கோபம். "இந்தாம்மா... நான் சத்திரிய வம்சம். உன்ன மாதிரி மீனவப் பொண்ணா பொறந்து மன்னனை மயக்குனவ நான் கிடையாது. உன்கிட்ட என்ன பேச்சு? பீஷ்மா, நீதான என்னய தூக்கிட்டு வந்த... நீயே எனக்கு ஒரு வழியச் சொல்லு"ன்னு கேக்குறா.
பீஷ்மனுக்கு ஒன்னும் சொல்லத் தெரியல. "அம்மா சத்யவதி சொன்னதுதான் சரி. நீ வேணும்னா அந்தப்புர தாசியா இரு. இல்லாட்டி உன் வழிய பாத்துட்டு கெளம்பு"ன்னு சொல்றான் பீஷ்மன்.
செம காண்டான அம்பா "அடே பீஷ்மா,  என்னைத் தூக்கிட்டு வந்து நடுத்தெருவுல விட்டுட்டல்ல?  இந்த நாள்.. உன் டைரில நோட் பண்ணிக்கோ... மவனே, நீ நெனச்ச நேரம் சாகுற வரம் வாங்குனவனா? இல்ல, உன் சாவுக்கு நான்தாண்டா காரணம். இது சத்தியம்டா"ன்னு தொடைல அடிச்சி சத்தியம் பண்ணிட்டு போயே போயிட்டா.

7 & 9
உன் சாவு என் கையாலன்னு பீஷ்மன்ட்ட சவால் விட்ட அம்பா நேரா காசிக்கு அவ அப்பன்ட்ட போறா. பாசக்கார அப்பனா இருந்தாலும், பீஷ்மனுக்கு பயந்து அம்பாவ விரட்டியடிக்கிறான்.
நேரா ஆத்தங்கரைக்கு வர்றா. ஆத்தங்கரையில உக்காந்து அழுதுட்டிருந்த அம்பாவ சில முனிவர்ஸ் பாத்து ஆறுதல் சொல்றாங்க.
"இந்த வீணாப்போன பீஷ்மன் மாதிரி சத்திரியன்ஸை எல்லாம் சண்டைபோட்டு விரட்டுறது பரசுராமர் தான். அதோட பீஷ்மனுக்கு தொழில் சொல்லிக்குடுத்த குருவும் பரசுராமர் தான். அவர் himalayasல தான் இருக்கார். நீ அவர்ட்ட போம்மா. உன் பிரச்சினைய அவர்தான் தீர்த்து வைப்பார்"ன்னு சொல்லி திருப்பி விடுறாங்க முனிவர்ஸ் எல்லாம்.
அம்பா நேரா himalayas போயி பரசுராமரை சந்திச்சு நடந்ததை சொல்றா. பரசுராமர் உடனே பீஷ்மனுக்கு ஒரு லெட்டர் எழுதி தூதன்ட்ட குடுத்து விடுறார்.
அதாவது "பிராது குடுத்த அம்பாங்குற பொண்ணு என்கிட்ட தான் வந்திருக்கா. நீ என்ன சொல்ற? பேசாம என்கூட சண்டைக்கு வா. சண்டையில நீ தோத்துட்டா அவளைக் கல்யாணம் பண்ணனும். நான் தோத்துட்டா அவளை விரட்டி விட்டுர்றேன். டீலா, நோ டீலா?"னு லெட்டர் அனுப்புறார் பரசு.
லெட்டரை படிச்சவுடனே பீஷ்மன் குரு பரசு கூட சண்டை போட himalayas கெளம்புறான். சண்டை நடக்குது. சண்டையில பீஷ்மன் win பண்றான். தொழில் சொல்லிக் குடுத்த குருவுக்கு தோல்வி. வானத்துல இருந்து தேவர்ஸ் எல்லாரும் இந்த வெட்டிச் சண்டைய வேடிக்கை பாக்குறாங்க.
அம்பாக்கு பீஷ்மன் மேல இருந்த கோபம் இப்போ பரசுராமர் மேலயும் பரவுது. நேரா அந்தாள்ட்ட போயி "யோவ் பெருசு... நீ எதோ பெரிய மனுசன்னு நினைச்சி உன்கிட்ட ஞாயங்கேக்க வந்தா, சண்டையில தோக்குறமாதிரி தோத்து பீஷ்மனை காப்பாத்துறியா நீ?"ன்னு கேக்குறா.
"எம்மா... ஆள விடு. நா வேணா ஒதுங்கிக்குறேன். நீ ஆத்தங்கரைக்குப் போயி முருகனை நோக்கி தவம் பண்ணு. முருகன் வந்து உனக்கு உதவுவார்"ன்னு சொல்லிட்டு எஸ்கேப் ஆகுது பெருசு.
ஏண்டா டே... கேமா ஆடுறீங்கன்னு புலம்பிட்டே ஆத்தங்கரைக்குப் போன அம்பா முருகனை வேண்டி தவம் பண்றா.
12 வருசம் (அடப்பாவிகளா) தவம் பண்ண பின்னாடி சாம்பிராணிப் புகையோட நேரில் காட்சியளிக்கிறான் லார்ட் முருகன். சினிமா மாதிரியே என்ன வரம் வேண்டும்னு கேக்க, அம்பா "என் வாழ்க்கைய நாசமாக்குன அந்தப் படுபாவி பீஷ்மன் சாகணும். அதுவும் என் கையால"ன்னு சொல்றா.
"அது உன்னால முடியாது. அதுவும்போக ஒரு பெண்ணால் பீஷ்மனுக்கு மரணமில்லை"ன்னு முருகன் சொல்ல "அப்பிடின்னா நான் பெண்மை நீங்கிப் பிறக்க வழிசொல்லு"ன்னு அம்பா கேக்குறா.
"அது வேற டிபார்ட்மென்ட். லார்ட் சிவன் தான் அதையெல்லாம் டீல் பண்றார். நீ சிவன்ட்ட போய் கேளு. நா கெளம்புறேன். என்னால ஆன ஒரு உதவி, இந்தா இது ஒரு முத்துமாலை. இதை எந்த ஆண் அணியுறானோ அவனால ஈசியா பீஷ்மனை கொல்லமுடியும். நா வரேன்"னு கெளம்பிட்டான் முருகன்.
முத்துமாலைய எடுத்துட்டு பீஷ்மனோட எதிரி பஞ்சாப் மன்னன் துருபதன் கிட்ட போய் குடுத்துட்டு, திரும்பவும் இமயமலையில சிவனை நோக்கி தவம் பண்றா அம்பா. So நினைச்ச நேரம் சாகுற வரம் வாங்குன பீஷ்மனை இப்ப துருபதன் நினைச்சா கொல்லலாம். கொன்னு தொலைய வேண்டியது தான? ம்ஹும். தவம் கன்டினியூ ஆகுது.
திரும்பவும் சாம்பிராணிப் புகை. இந்த வாட்டி சிவன் வரார். வந்து என்ன வரம் வேணும்னு கேக்க "அந்தப்பய பீஷ்மன் என் கையால சாகணும். அதுக்கு நான் பெண்மை நீங்கிப் பிறக்கணும்"னு அம்பா சொல்றா.
"உன்னோட இந்த ஜென்மத்துல பீஷ்மன் சாகமாட்டான். டைம் வேஸ்ட் பண்ணாத. அடுத்த ஜென்மத்துல நீ சிகண்டின்னு ஒரு திருநங்கையா பிறந்து வா. அந்த பீஷ்மனோட சாவுக்கு சிகண்டியான நீதான் காரணம். நா வரேன்"னு சிவன் கெளம்பிட்டான்.
அதாவது, நந்தினி பசுவை ஆட்டயப்போட்ட A1 அக்யூஸ்டுக்கு இந்த ஜென்மத்துல ஒரு திருநங்கையால தான் சாவுன்னு வசிஷ்டர் சாபம் விட்டது மேட்ச் ஆகுதா? அது.
அம்பாவுக்கு அடுத்த ஜென்மம் வரைக்கும் காத்திருக்க பொறுமையில்ல. இப்பவே செத்து சிகண்டியா பிறப்போம்னு முடிவுபண்ண அம்பா "பீஷ்மா... விடமாட்டேன்டா"ன்னு கத்திக்கிட்டே தீயில விழுந்து எரிஞ்சு சாம்பலாகுறா.

*******
அப்பிடியே 12 வருசம் பேக்ல போயி, அஸ்தினாபுரம் அரண்மனையில மன்னன்  நோஞ்சாம்பய விசித்ரவீர்யனுக்கு அம்பிகாவையும், அம்பாலிகாவையும் திருமணம் பண்ணி வச்சாங்களே. அங்க போவோம்.
அம்பிகாவும், அம்பாலிகாவும் பால் சொம்போட பர்ஸ்ட் நைட்டுக்குத் தயாராகுற நேரத்துல, தல விசித்ரவீரியன் பொசுக்குன்னு மயங்கி விழுறான்.

Write a comment ...

Sankar Srinivasan

Show your support

Support me to contribute more.

Write a comment ...

Sankar Srinivasan

Certified Market Professional of National Stock Exchange of India