அதாகப்பட்டது…. திரேதாயுகத்தில் ராமன் வாழ்ந்திருக்கிறான். ராமாயணம் வால்மீகியால் எழுதப்பட்டது. கம்பர் தமிழில் மொழிபெயர்த்தார். ராமன் சூர்ய வம்ச வழித்தோன்றல்.
துவாபரயுகத்தில் பாண்டவர்கள், கவுரவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். இவர்களது வாய்க்காத் தகராறே மகாபாரதமாக எழுதப்பட்டது. இயற்றியவர் வியாசர். வில்லிபுத்தூர் ஆழ்வார் தமிழில் மொழிபெயர்த்தார். பாண்டவ, கவுரவ அங்காளி பங்காளிகள் எல்லோரும் சந்திர வம்ச வழித்தோன்றல்.
இந்த சூரியன் சூரியகுடும்பத்தின் தலைமைக் கோள். சந்திரன் பூமியின் துணைக்கோள். இந்த வெங்காயம் எல்லாம் எங்களுக்கும் தெரியும். ஆனா.. சூரிய வம்சம்னா சூரியனின் வாரிசுகள், சந்திர வம்சம்னா சந்திரனின் வாரிசுகள்.
எப்பிடிப்பா? அது அப்பிடித்தான். சேர சோழ பாண்டியர் மூவரும் சூரியவம்ச வழித்தோன்றல்னு சொல்றதில்லையா? கள்ளர் மறவர் அகமுடையர் மூவரும் சூரியவம்சம்னு அவிங்க பெருமையா சொல்லிக்கிறதில்லையா? அப்பிடித்தான்…
அந்தக்காலத்தில், ஒட்டுமொத்த உலகமும் பாரதம் என்றே அழைக்கப்பட்டதாம். அடேங்கப்பா… அகண்ட பாரதமே இங்க இருந்து தான் ஆரம்பிக்குதா? ************
திரேதா யுகம் 12,96,000 ஆண்டுகளைக் கொண்டது. அந்த யுகத்தில், சூர்ய வம்சத்தில் தசரதன் மகன் ராமன் பிறக்கிறான். இந்த திரேதா யுகத்தின் தொடக்க நாளையே அட்சய திருதியை என்கிறார்கள். நம்ம மக்களுக்கு அதெல்லாம் தெரியாது. ஆனா அன்னிக்கு நகை வாங்குனா பெருகும்னு எவனோ கிளப்பிவிட்டத மட்டும் இவனும் நம்புவான்.
திரேதா யுகம் முடிந்து, துவாபர யுகம் தொடங்கும் சமயத்தில் பாரதத்தை சந்திரவம்சம் அல்லது பரதவம்சம் அல்லது குரு வம்சத்தவர் ஆளத் துவங்குகிறார்கள்.
(ராமன் ஆண்டது அயோத்தி, மகாபாரதம் அஸ்தினாபுரத்தில் துவங்குகிறது… பிறகு எப்படி முழு பாரதத்தை ஆண்டார்கள்னு கேள்வி வருதா? வரணுமே…)
துவாபர யுகத்தில் சந்திரன் என்பவன் “பாரதத்தை” ஆளத் துவங்குகிறான். அதனால் இது சந்திர வம்சம். சந்திரனின் வாரிசுப் படிநிலை…
- குரு (இந்த குரு ஆளும்போதே குரு வம்சத்தவர் என்றும் கவுரவர் என்றும் அழைக்கப்படுகிறார்கள். இவன் ஆண்டநாடு “குருவின் இடம்” அல்லது குருட்சேத்திரம் என்றும் அழைக்கப்பட்டதாம். தலைநகர் அஸ்தினாபுரம். அப்புறம் பாரதத்தை ஆண்டதாச் சொன்னது? தம்பி… கேள்வியெல்லாம் கேக்கப்படாது)
- பிரதீபன் - சாந்தனு
சாந்தனுங்குற இந்த மெயின் கேரக்டர்ல இருந்து தொடங்குவோம்… டைரக்டர் பாக்யராஜ் கூட இவம்பேரைத் தான் மகனுக்கு வச்சிருக்கார். அப்பிடியென்ன சிறப்புன்னு பாத்துருவோம்.
ஸ்டாப்பு… பொங்கல் வாங்கித் தின்னுட்டு, போயிட்டு நாளைக்கு வாங்க…
Write a comment ...