முன்னொரு நாளில்..(!) நந்தினி என்ற பசு மாட்டை ஆட்டயப் போட்ட குற்றத்துக்காக வசிஷ்டர் கிட்ட சாபத்தை வாங்குன எட்டு பேருல ஏழுபேரு இந்த ஜென்மத்துல கங்காதேவிக்கு பிள்ளையா பிறந்து அவ ஆத்துல தூக்கிப் போட்டுட்டா... So சாபம் தீர்ந்தது.
எட்டாவதாப் பொறந்தவனை வளர்த்தபிறகு தான் வருவேன்னு, குழந்தையத் தூக்கிட்டுப் போயிட்டா கங்காதேவி.
சின்னப்பயலுக்கு என்ன தைரியம்னு சொல்லிட்டு, வில் எடுத்து அவனோட சண்டை போடுறான் சாந்தனு. திடீர்னு "நிறுத்துங்க"ன்னு சத்தத்தோட வந்து நிக்கிறாங்க ஒரு அம்மா. அட, நம்ம கங்கம்மா.
"கங்கம்மா..."ன்னு சாந்தனு ஓடிவர்றான். நிப்பாட்டுனா கங்கம்மா. "நில்லுங்க, நீங்க எதுக்கு வருவீங்கன்னு தெரியும். அதெல்லாம் நடக்காது. தம்பி, இங்க வாடா. இவருதான் ஒன்ற தகப்பன். இந்த பாரதத்தை ஆளும் மன்னன் சாந்தனு"ன்னு சொல்லி அவனை சாந்தனு கிட்ட ஒப்படைச்சா கங்கம்மா.
"மன்னா, எட்டாவதா பிறந்த நம்ம பையர் இவருதான். இவரு பேரு காங்கேயன் alias தேவவிரதன் (பின்னாடி பீஷ்மரு). இவனுக்கு வில்வித்தைய பரசுராமர் கத்துக் குடுத்தார். Extra curriculars எல்லாம் வசிஷ்டர் கத்துக் குடுத்தார். இனி நீயாச்சு, அவனாச்சு. நா கெளம்புறேன்"னுட்டு போயிட்டா கங்கம்மா.
(பரசுராமர் 12,96,000 வருஷம் கழிச்சு இந்த யுகத்துலயும் continue ஆகுறார்.
அ ந்த வசிஷ்டர் முன்னொரு காலத்துல A1 அக்யூஸ்ட்க்கு சாபம் குடுத்தார். அவரே எப்பிடி இந்த ஜன்மத்துல பிறந்த அதே கேரக்டருக்கு extra curriculars சொல்லிக் குடுத்தார்?)
தம்பி, இன்னிக்கு பொங்கல்ல நெய் கொஞ்சம் தூக்கல். அப்பச் சரி.
Write a comment ...